மழைக்காலங்களில் எங்க ஊர் காடுகளில் நிறைந்து காணப்படும். எங்க ஊர் சிறுவர்களுக்கு பாசக்கார குருவி. ஆனால் எங்க ஊர் பெருசுகளுக்கு பிடித்தமானஉணவு அயிட்டம். இந்தியன்பிட்டா, என்று அழைக்கப்படும் இப்பறவை வடநாட்டுப்பகுதிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்ட குறிப்பாக கடற்கரையோர பகுதிகளில் மழைகாலங்களில் படையெடுத்து வரும். மழை காலங்கள் முடிந்த பின் மீண்டும் அதன் இருப்பிடத்தை நோக்கி சென்று விடும்.இங்கு இருக்கும் காலங்கள் அவற்றிற்கு சோதனை காலமே!இங்கு இவை உணவிற்காக வேட்டையாடப்படுகின்றன.வேட்டைக்காரர்கள் இதை பிடிப்பது அலாதியானது மழைகாலங்களில் இடி இடிக்கும்போது இவை புதர்க்காடுகளில் போய் பதுங்கும் அப்போது அவர்கள் வலை வைத்து பிடிப்பார்கள்.சட்டப்படி இவை பிடிப்பது குற்றமாகும், ஆனால் வனத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டோ அல்லது அவர்களை கவனிக்கும் விதத்தில் கவனித்து விட்டு பிடித்து வந்து விற்பனை செய்வார்கள். தற்போது நிலவரப்படி இதன் விலை ஒரு குருவி 25 ருபாய் விற்கப்படுகிறது. இக்காலங்களில் இதனை வேட்டையாடுபவர்களீன் வாழ்வு வளமாக இருக்கும், ஆனால் இக்குருவிகளின் வாழ்வோ சோதனைக்களமாக இருக்கும்.எங்க ஊர் சிறுவர்களுக்கு உயிருள்ள விளையாட்டு பொம்மை , அவர்கள் இதன் தலை முடியை பிடித்துக் கொண்டு பேயாடம்மா பேயாடு காட்டு கரையில் விட்டுரேன் என்று பாட்டு பாடுவார்கள்.இவை தத்தி தத்தி தவளை போல் தாவி நடந்து செல்லும் அழகே தனி. அதைப் பார்த்து எங்க ஊர் பொம்பளைங்க இக்குருவி இடி இடிக்கும்போது தவளையிலிருந்து வெளி வரும் என்று கதை சொல்வார்கள்(கதைக்கட்டுவதில் நம்ம ஊர்பொம்பளைகளுக்கு நிகர் யார்?) இதனை ஒவ்வொரு ஊர்களிலும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பதுண்டு காட்சு, பொன்னதட்டான்,காசுகரட்டி,கொண்டைகாட்சு தவிட்டான் போன்ற பெயர்களில் அழைப்பதுண்டு.இவற்றின் பிரதான உணவு மண்புழு, பூச்சி, தும்பி போன்றவை.மண்ணுக்குள் செல்லும் மண்புழுவை தன் உணர்வு நுட்பத்தால் அழாகாக பிடித்து தின்னும். இவற்றை பிடிக்கும் போது அவற்றுடன் சேர்ந்து குயில், சிட்டுக்குருவி, கம்பத்தான், கானகோழி கொண்டைகிளச்சு, சூரவந்தான், பொன்னிக்குசக்களத்தி(ஒருவகை குருவியை அப்படி அழைப்பதுண்டு) பூக்காளான் குருவி செங்காடை, போன்றவைகளும் சேர்ந்து மாட்டுவதுமுண்டு.நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்கள் பொழுதை போக்குவதே இவைதான். இவை அதிகபட்சமாக நான்கு முட்டைவரை இடும்.ஆண் பெண் இனம் காணுவது கடினம் என்றாலும் பெண் குருவி மார்பு அகன்றும் ஆண்குருவி மார்பு சற்று ஒடுங்கியும் காணப்படும்.மேலும் ஆண் குருவியின் இறக்கைகளின் ஓரத்தில் மினுமினுத்த நீல நிறம் காணப்படும் அதன் அலகும் கருமை நிறத்தில் இருக்கும். அழிந்து வரும் அற்புதமான இந்த இனத்தை காக்க வேண்டியது அரசின் கடமையே காரணம் இவை திரும்பி செல்லும்போது மிக சொற்பமானவைகளே திரும்பிச் செல்கின்றன.
Friday, May 22, 2009
பொன்னிக்குருவி

Subscribe to:
Post Comments (Atom)
குருவிக்காரன்,
ReplyDeleteபெயரே ஈர்க்கிறது.
வாழ்த்துகள் !